கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்: பாலிவுட் பாணியில் போட்டோ ஷூட்!

கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்: பாலிவுட் பாணியில் போட்டோ ஷூட்!

'பைலட்ஸ்' எனும் மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர் கீர்த்தி சுரேஷ். அதன்பிறகு தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்துவந்த அவர் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஆரம்பத்தில் அவர் நடித்த படங்கள் அனைத்தும் செம ஹிட்டாகின.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ’நடிகையர் திலகம்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன், அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.

கடைசியாக ‘சாணிக் காயிதம்’ திரைப்படம் வெளியானது. படத்துக்குக் கலவையான வரவேற்பு கிடைத்தாலும், கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.

எனினும், அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவுக்குச் சிறந்த படங்கள் அவருக்கு அமையவில்லை. இந்நிலையில், இப்போது நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

அண்மையில் பாலிவுட் நாயகிகளுக்கு இணையாக நவீன ஆடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவிலும் பதிவுசெய்துவருகிறார். அதற்கு இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in