ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை!

ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை!

`ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை' என்று படக்குழு தெரிவித்துள்ளது.

மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்து ‘பூலோகம்’ இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் ‘அகிலன்’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதையடுத்து ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கும் படத்தை ராஜேஷ்.எம் இயக்குகிறார். இவர், ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’ஆல் இன் ஆல் அழகுராஜா’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இந்தப் படத்தையும் ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். இதில் ஜெயம் ரவி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகக் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாயின. ஆனால், அவர் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

கீர்த்தி, இப்போது உதயநிதி ஸ்டாலினுடன் ’மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in