‘விசில் மகாலட்சுமி’யான கீர்த்தி ஷெட்டி

நடிகை கீர்த்தி ஷெட்டி
நடிகை கீர்த்தி ஷெட்டி

லிங்குசாமி இயக்கும் ’த வாரியர்’ படத்தில், ’விசில் மகாலட்சுமி’ என்ற கேரக்டரில் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.

விஷால் நடித்த 'சண்டக்கோழி 2' படத்துக்குப் பிறகு லிங்குசாமி இயக்கும் படத்தில், தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். கீர்த்தி ஷெட்டி ஹீரோயின். இவர், தெலுங்கில் ‘உப்பெனா’, ‘ஷியாம் சிங்கா ராய்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஆதி, அக்‌ஷரா கவுடா உட்பட பலரும் இப்படத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கில் உருவாகும் இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.

லிங்குசாமி
லிங்குசாமி

ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாசா சித்தூரி - பவன் குமார் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தின் தலைப்பும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. படத்துக்கு ’த வாரியர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் ராம், முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். படம் பற்றிப் பேசிய இயக்குநர் லிங்குசாமி, “இந்தப் படம் வழக்கமான போலீஸ் கதையாக இருக்காது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு, இதில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகை கீர்த்தி, ஸ்கூட்டியில் செல்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ள படக்குழு, அவர் ‘விசில் மகாலட்சுமி’ என்ற கேரக்டரில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in