`அதற்கான வசதி உங்கள் வீட்டில் இல்லை'- காவ்யா மாதவனிடம் ஏப்.18-ல் போலீஸ் விசாரணை

`அதற்கான வசதி உங்கள் வீட்டில் இல்லை'- காவ்யா மாதவனிடம் ஏப்.18-ல் போலீஸ் விசாரணை

நடிகை கடத்தல் வழக்கில் நடிகை காவ்யா மாதவனிடம் நடத்த இருந்த விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு பிரபல நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் திலீப் உட்பட 7 பேர் மீது வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பு உள்ளது என்பதை உறுதிப்படுத்தும் ஆடியோ வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அவரிடமும் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்து, விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர் சென்னையில் இருப்பதால், 13-ம் தேதி (நேற்று) தன்னிடம் விசாரணை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், நேற்று அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. ஆலுவாவில் உள்ள தனது வீட்டில் விசாரிக்கலாம் என்று காவ்யா மாதவன் தெரிவித்திருந்தார். அந்த வீட்டில்தான் நடிகர் திலீப்பும் இருக்கிறார். அங்கு ஆடியோ, வீடியோ கிளிப், சாட்சிகளின் அறிக்கைகள் உள்பட பலவற்றைக் காட்டி விசாரணை நடத்த வேண்டும் என்பதால், அதற்கான வசதி அங்கு இல்லை என்று கூறி விசாரணையை நடத்தவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து 18-ம் தேதி அவரிடம் விசாரணை நடத்தக் குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.