கமல் தயாரிப்பில் நடிக்கும் கவின்?

டாடா - பிக் பாஸ் கவின்
டாடா - பிக் பாஸ் கவின்

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் நடிகர் கவின் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கணேஷ் கே பாபு இயக்கத்தில் நடிகர்கள் கவின், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்ளிட்டப் பலரும் நடித்திருக்கும் ‘டாடா’ திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து நடிகர் கமல்ஹாசன் மொத்தப் படக்குழுவினரையும் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

கணேஷ் கே பாபு மற்றும் ‘டாடா’ படத்தில் வேலைப் பார்த்த படக்குழுவினர்களில் பெரும்பாலானோர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனலில் வேலை பார்த்தவர்கள் ஆவர். ’டாடா’ படம் பிடித்துப் போனதாலே கமல்ஹாசன் அடுத்து தயாரிக்கும் படத்தை கணேஷ் கே பாபு இயக்க அதில் கவின் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in