புதுவகை ஜானரில் உருவாகிறது ’பி.ஈ. பார்’

புதுவகை ஜானரில் உருவாகிறது ’பி.ஈ. பார்’
சுரேஷ் ரவி, இஷாரா நாயர்

’காவல்துறை உங்கள் நண்பன்’ படக்குழு, ஃபிரண்ட்ஷிப் காமெடி எனும் புது ஜானரில் ’பி.ஈ. பார்’என்ற திரைப்படத்தை உருவாக்குகிறது.

’காவல்துறை உங்கள் நண்பன்’ திரைப்படம் அதன் தீவிரமான கருத்துக்காக பாராட்டப்பட்டது. இந்தத் திரைக்குழுவினர், அடுத்து, ’பி.ஈ. பார்’ (B.E. BAR) என்ற தலைப்பில் புதிய படத்தை உருவாக்குகின்றனர். இது, ’ஃபிரண்ட்ஷிப் காமெடி’ எனும் புதுவகை ஜானரில் உருவாகிறது. இக்கதையின் மையம் பொறியியல் கல்லூரி மாணவர்கள், தங்கள் அரியர்ஸை முடிப்பதற்காக படும்பாடுகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.

சுரேஷ் ரவி, இஷாரா நாயர்
சுரேஷ் ரவி, இஷாரா நாயர்

மோ மற்றும் காவல்துறை உங்கள் நண்பன் படங்களில் நடித்த சுரேஷ் ரவி இதில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக ’சதுரங்க வேட்டை’ இஷாரா நாயர் நடிக்கிறார். தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

’காவல்துறை உங்கள் நண்பன்’ இயக்குநர் ஆர்டிஎம் (RDM) படத்தை இயக்குகிறார். அப்சலூட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் மால்கம், பிஆர் டாக்கிஸ் கார்பரேசன் மற்றும் ஒயிட் மூன் டாக்கீஸுடன் இணைந்து தயாரிக்கிறார். பி. பாஸ்கரன், பி. ராஜபாண்டியன் மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன. ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in