இந்தி படத்துக்காக விஜய் சேதுபதி ஒத்திகை: பிரபல நடிகை வெளியிட்ட போட்டோ வைரல்!

இந்தி படத்துக்காக விஜய் சேதுபதி ஒத்திகை: பிரபல நடிகை வெளியிட்ட போட்டோ வைரல்!

இந்தி படத்துக்காக, விஜய் சேதுபதியுடன் ஒத்திகையில் ஈடுபட்ட புகைப்படத்தை நடிகை கேத்ரினா கைஃப் பகிர்ந்துள்ளார்.

விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் நடிக்கும் இந்திப் படம் ’மெர்ரி கிறிஸ்துமஸ்’. இதை ஸ்ரீராம் ராகவன் இயக்கி வருகிறார். இவர், அந்தாதூன், ஏஜென்ட் வினோத், பத்லாபூர் உட்பட சில இந்திப் படங்களை இயக்கியவர். 'அந்தாதுன்' படம், தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் ஆகி இருக்கிறது. ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

அப்போது விஜய் சேதுபதி, ஸ்ரீராம் ராகவன் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கேத்ரினா, ’இயக்குநர் ஸ்ரீராம் ராகவனுடன் பணிபுரிவதை எப்போதும் விரும்புவேன். த்ரில்லர் கதைகளைச் சொல்வதில் அவர் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி’ என்று கூறியிருந்தார். இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், நடிகை கேத்ரினா, விஜய் சேதுபதியுடன் படப்பிடிப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டுள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், விஜய் சேதுபதி, கேத்ரினா கைஃப் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தப் புகைப் படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விஜய் சேதுபதி ஏற்கெனவே ’மும்பைக்கர்’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இது ’மாநகரம்’ படத்தின் ரீமேக். அடுத்து ’காந்தி டாக்ஸ்’ என்ற இந்தி படத்தில் நடிக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in