
சல்மான்கான் நடிக்கும் ‘டைகர் 3’ திரைப்படம் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி வெளியீடாக வரவுள்ளது. இத்திரைப்படத்தில் கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி, ரித்தி தோக்ரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் நடிகை கத்ரீனா உளவாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இதனால், அவர் பல ரிஸ்கியான சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். அதிலும், இந்தப்படத்தில் இடம் பெற்று இருக்கும் குளியலறை சண்டைக் காட்சி இணையத்தில் வைரலாகி சென்ஷேனலாகியது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தது தொடர்பான அனுபவம் குறித்து கத்ரீனா கைஃப் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், 'டைகர் 3' படத்திற்காக தனக்கு இதுவரை இருந்த எல்லைகளைக் கடந்து பணியாற்றியுள்ளதாக கூறியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தனது சகிப்புத்தன்மையைச் சோதிப்பதுபோல், இருந்தாலும், அதில் இருந்து தனது பலம் என்ன என்பதை உணர்ந்து கொண்டதாகவும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
தன்னிடம் ஒருவர் வலி என்பது இன்னொரு உணர்வு அதற்கு பயப்படாதீர்கள், அதற்கு அஞ்சி ஓடாதீர்கள் என்றார். இந்த படத்தில் நடித்தபோது, பல நாட்கள் சோர்வாக உணர்ந்ததாகவும், தன் உடல் அதிகமாக வலித்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் அதை ஒவ்வொரு நாளும் சவாலாக எடுத்துக்கொண்டு, எதிர்கொள்ள தன்னைத் தானே ஊக்கப்படுத்திக்கொண்டதாகவும் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சண்டைப் பயிற்சியின் இருந்த சவால்களை எதிர்கொள்ள, இன்னொரு நபரை கற்பனையில் உருவாக்கிக்கொண்டதாகவும், தான் சோர்ந்து போனாலும், தன் ஈகோ சோர்வடையவில்லை. அதனால், ஒரு முடிவு செய்தால் அதில் உறுதியுடன் இருங்கள் என்று கத்ரீனா தெரிவித்துள்ளார். அதனாலேயே முன்பு இருந்ததை விட இம்முறை மிகச்சிறந்த சண்டை காட்சிகளில் நடிக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் ஒருசில நாட்களில் 'டைகர் 3' திரைப்படம் வெளியாக உள்ளது. அதற்காக ஆர்வத்துடனும், பதற்றத்துடனும் காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.