‘இஷ்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதிர்

‘இஷ்க்’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் கதிர்

மலையாளத்தில் 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இஷ்க். ரதீஷ் ரவியின் எழுத்தில் அனுராஜ் மனோகர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். படத்தின் நாயகனாக ஷேன் நிகாமும், நாயகியாக ஆன் ஷீத்தலும் நடித்திருந்தனர்.

காதல் ஜோடி ஒன்றை இரவு நேரத்தில் மப்டி போலீஸார் இருவர் டார்ச்சர் செய்கின்றனர். அவர்களைப் பழிவாங்கக் காதலன் எடுக்கும் முயற்சிகள். இதை மையப்படுத்தியே ‘இஷ்க்’ திரைப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. மனித மனதின் கோர பக்கங்களை வெளிச்சம் போட்டுக்காட்டிய இத்திரைப்படம் மிகப்பெரும் வெற்றியடைந்தது.

இத்திரைப்படத்தை இந்தியில் அமீர் கானின் மகனை வைத்து நீரஜ் பாண்டே இயக்கிவருகிறார். தெலுங்கில் ‘இஷ்க்’ என்ற பெயரில் ரீமேக் செய்தனர். தற்போது இத்திரைப்படம் தமிழில் ரீமேக் ஆகவுள்ளது. இதில் கதாநாயகனாக ‘கதிர்’ நடிக்கவுள்ளார். ‘பேச்சிலர்’ திரைப்படத்தில் நடித்த திவ்யபாரதி கதாநாயகியாக நடிக்கவுள்ளார். விரைவில் இத்திரைபடத்தின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in