`பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து விலகும் கதிர்?

’பாண்டியன் ஸ்டோர்ஸ்’
’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகர் குமரன்

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து நடிகர் குமரன் விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் டிவியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் குமரன், கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கதிர்-முல்லை ஜோடிக்கும் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், அந்த சீரியலில் இருந்து குமரன் விலக அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்கவே விருப்பம் என்பதை குமரன் பல பேட்டிகளில் கூறி இருக்கிறார். சமீபத்தில் அவர் ‘வதந்தி’ இணையத்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்போது , ‘மாயதோட்டா’ என்ற இணையத்தொடரிலும் இசட் பிரிவு சீஃப் செக்யூரிட்டி ஆஃபீசராக நடித்துள்ளார். ‘வதந்தி’ வெப்சீரிஸ் பார்த்தே இவருக்கு இந்த வாய்ப்பு வந்திருக்கிறது. சினிமாவைப் போலவே ஓடிடி தொடர்களுக்கும் பரவலான பார்வையாளர்கள் இருப்பதால் அதில் அதிக கவனம் செலுத்த குமரன் திட்டமிட்டுள்ளார். இதனால், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இருந்து அவர் விலகிவிடுவாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து குமரன் எதுவும் விளக்கம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in