'காசேதான் கடவுளடா' ரிலீஸ் தேதி அறிவிப்பு

'காசேதான் கடவுளடா'  ரிலீஸ் தேதி அறிவிப்பு

சிவா, பிரியா ஆனந்த் நடித்த 'காசேதான் கடவுளடா' திரைப்படம் அக்.7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1972-ம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளியான படம் 'காசேதான் கடவுளடா'. இப்படத்தில் முத்துராமன், லெட்சுமி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிறாடை மூர்த்தி, மனோரமா உள்பட பலர் நடித்த நகைச்சுவைத் திரைப்படமான 'காசேதான் கடவுளடா' படத்தை மீண்டும் ரீமேக் செய்துள்ளனர்.

ஆர்.கண்ணன் இயக்கத்தில் இப்படத்தில் சிவா கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியாஆனந்த் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, ஊர்வசி, கருணாகரன், சிவாங்கி உள்பட பலர் நடித்த இப்படத்திற்கு பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜ் பிரதாப் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படம் அக்டோபர் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in