கருணாஸின் `ஆதார்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

கருணாஸின் `ஆதார்' படத்துக்கு யு/ஏ சான்றிதழ்

கருணாஸின் ’ஆதார்’ படத்துக்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது.

'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' படங்களை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில், கருணாஸ் நடித்துள்ள படம், 'ஆதார்'. வெண்ணிலா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்துள்ளார். அருண் பாண்டியன், திலீபன், 'பாகுபலி' பிரபாகர், நடிகைகள் இனியா, ரித்விகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழு, படத்துக்கு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in