பிராந்திய வாழ்வை முன்வைக்கும் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம்!

‘கள்ளன்’ பாடல் வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி பேச்சு
பிராந்திய வாழ்வை முன்வைக்கும் படைப்புகளுக்கு ஆயுள் அதிகம்!
’கள்ளன்’ பாடல் வெளியீட்டு விழாவில்

எலெக்ட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ள படம் ’கள்ளன்’. சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கரு பழனியப்பன் கதாநாயகனாக நடித்துள்ளார். பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் குமரன் இந்தப் படத்தை வெளியிடுகிறார். வரும் 18-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.

இயக்குநர்கள் சீனு ராமசாமி, ராஜூ முருகன், இசையமைப்பாளர் கே, மாயா, நமோ நாராயணன், பத்திரிகையாளர் ஜெயராணி, எழுத்தாளர் தமயந்தி, நடிகர் ஆரி அர்ஜுனன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இயக்குநர் சீனு ராமசாமி
இயக்குநர் சீனு ராமசாமி

விழாவில், இயக்குநர் சீனு ராமசாமி பேசும்போது, “இந்தப் படத்தின் விஷுவல்கள் ரத்தமும் சதையுமாக இருக்கின்றன. இதுபோன்ற பிராந்திய வாழ்வை முன்வைக்கிற படைப்புகளுக்கு ஆயுள் அதிகம். ஒரு பெண் எழுத்தாளர், இயக்குநராவதை ஆதரிக்க வேண்டும். பெரிய படங்களுக்குக் கிடைக்கும் அங்கீகாரம் சிறிய படங்களுக்குக் கிடைப்பதில்லை. பெரிய படங்கள் வெளியானால் ரசிகர்கள் வெற்றி பெற வைக்கிறார்கள். ஆனால், ‘கள்ளன்’ வெற்றி பெறுவதில்தான் நாகரிகம் இருப்பதாகக் கருதுகிறேன்” என்றார்.

இயக்குநர் சந்திரா தங்கராஜ்
இயக்குநர் சந்திரா தங்கராஜ்

இயக்குநர் சந்திரா பேசும்போது, “என் தயாரிப்பாளருக்கு நன்றி. இவருக்கு முன், நூறு பேருக்குக் கதை சொல்லி இருப்பேன். ’நீங்க எப்படி இந்தப் படத்தை எடுப்பீங்க?’ என்று சொல்லியே மறுத்துவிட்டார்கள். என் நண்பர்கள்தான் துணையிருந்தனர். எனக்கும் கரு பழனியப்பனுக்கும் சாதாரண நிர்வாகச் சிக்கல். அது சரியாகிவிடும். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கலாம்” என்றார்.

Related Stories

No stories found.