இயக்குநர் ஷங்கர் மகளுடன் ஜோடி சேரும் நடிகர் கார்த்தி: 'விருமன்’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

இயக்குநர் ஷங்கர் மகளுடன் ஜோடி சேரும் நடிகர் கார்த்தி: 'விருமன்’ ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்

கார்த்தி நடித்துள்ள ’விருமன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு திடீரென மாற்றியுள்ளது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம், ’விருமன்’. இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி, இந்தப் படம் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். இதில், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சரண்யா, கருணாஸ், சூரி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்.கே.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்தை நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் குறித்து இயக்குநர் முத்தையா, ‘‘வாழ்க்கையில் எல்லோரும் தவறு செய்வார்கள். அதை யாராவது சுட்டிக்காட்ட வேண்டும். நமக்கு நல்லது செய்யும் அந்த உறவுதான் நல்ல உறவு. அந்த நேர்மையைச் சொல்லும் படமாக ’விருமன்’ இருக்கும்'' என்று கூறியிருந்தார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்ட நிலையில், ஆகஸ்ட் 31-ம் தேதி இந்தப் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in