மைசூர் காட்டுப்பகுதிகளில் கார்த்தியின் ’சர்தார்’

’சர்தார்’
’சர்தார்’

கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தின் ஷூட்டிங், மைசூர் காட்டுப்பகுதிகளில் நடக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம், ’சர்தார்’. ராஷிகண்ணா நடிக்கிறார். இதில், சிம்ரன், ஷங்கி பாண்டே, ரஜிஷா விஜயன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மண்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

’சர்தார்’ -  கார்த்தி
’சர்தார்’ - கார்த்தி

இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதை அடுத்து, கொடைக்கானல் மற்றும் மைசூர் காட்டுப்பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இதில், ஸ்டன்ட் காட்சிகளை பிரம்மாண்டமாக திலீப் சுப்பராயன் திட்டமிட்டுள்ளார்.

‘சர்தார்’ படத்திலிருந்து சமீபத்தில் வெளியான கார்த்தியின் தோற்றம், ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. படப்பிடிப்பு முடிவடையும் முன்பே, இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை ‘ஆஹா’ நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in