
கார்த்தி நடிக்கும் ’சர்தார்’ படத்தை பிரபல ஓடிடி நிறுவனம் ரூ.20 கோடிக்கு வாங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'சர்தார்'. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் நாயகிகளாக நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மைசூரு அருகே நடந்து வருகிறது. இந்தப் படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பின்னான டிஜிட்டல் உரிமைகளை ஆஹா தமிழ் ஓடிடி நிறுவனம் பெற்றுள்ளது.
ரூ.20 கோடிக்கு இந்த உரிமையை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. கார்த்திக்கு தெலுங்கிலும் மார்க்கெட் இருப்பதால் அதற்கும் சேர்த்து இந்த தொகைக்கு வாங்கி இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.