ரஷ்ய மொழியில் கார்த்தியின் ‘கைதி’

ரஷ்ய மொழியில் கார்த்தியின் ‘கைதி’
கார்த்தி நடித்த ‘கைதி’ படம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கார்த்தி நடித்த படம் ‘கைதி’. 2019-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், மாபெரும் வசூல் சாதனையைப் புரிந்தது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். வசூல் சாதனை மட்டுமன்றி பல்வேறு விருதுகளையும் குவித்தது. தென்னிந்திய மொழிகளில் சாதனையைப் புரிந்த ‘கைதி’, இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.

தற்போது ‘கைதி’ படத்துக்கு மற்றுமொரு மகுடமும் கிடைத்துள்ளது. ரஷ்ய மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.