
ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘ஜப்பான்’ படத்தின் டச்சிங்... டச்சிங் பாடல் வெளியாகி இருக்கிறது.
தீபாவளி விடுமுறையை ஒட்டி ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி, அனு இம்மானுவேல் நடிப்பில் ‘ஜப்பான்’ படம் வெளியாக இருக்கிறது. படத்தின் புரோமோஷனின் ஒரு பகுதியாக இதில் இருந்து ‘டச்சிங்...டச்சிங்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்டமாக டிரெயின் செட் போட்டு இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கார்த்திக், இந்திராவதி பாடியுள்ள இந்தப் பாடலுக்கு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். கலக்கலான பெப்பி பாடலாக வெளியாகியுள்ள இந்தப் பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தமன்னாவின் காவாலா பாடலுக்கு டஃப் கொடுக்கும் விதமாக உருவாகியுள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.