`ஜிகிர்தண்டா’ 2ம் பாகம்: கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்!

`ஜிகிர்தண்டா’ 2ம் பாகம்: கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட அப்டேட்!

’ஜிகிர்தண்டா’ படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம், ’ஜிகிர்தண்டா’. இதில் லட்சுமி மேனன் நாயகியாக நடித்தார். பாபி சிம்ஹா, கருணாகரன், குரு சோமசுந்தரம் உட்பட பலர் நடித்த இந்தப் படம் 2014-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்த இந்தப் படத்தில், வில்லனாக நடித்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் பற்றி அவ்வப்போது செய்திகள் வெளியாவது வழக்கம். இந்தப் படம் வெளியாகி 8 வருடம் ஆகிறது. இதையொட்டி, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஜிகிர்தண்டா படத்தின் போது எடுக்கப்பட்ட சில காட்சிகளை பதிவிட்டுள்ள அவர், இரண்டாம் பாகத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடந்து வருவதாக அதில் தெரிவித்துள்ளார். இதனால் ஜிகிர்தண்டா படத்தின் அடுத்தப் பாகம் உருவாவது உறுதியாகி இருக்கிறது. இந்தப் படத்தின் முக்கிய கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in