கார்த்தியின் 25-வது படம் ‘ஜப்பான்’: படப்பிடிப்பு தொடங்கியது

கார்த்தியின் 25-வது படம் ‘ஜப்பான்’: படப்பிடிப்பு தொடங்கியது

’ஜப்பான்’ என பெயர் சூட்டப்பட்டுள்ள கார்த்தியின் 25-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று(நவ.8) பூஜையுடன் தொடங்கியுள்ளது.

கார்த்திக் நடிக்கும் புதிய திரைப்படத்துக்கு ஜப்பான் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க நாளன்றே படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க ராஜூ முருகன் இயக்க உள்ளார். முன்னதாக ’ஜோக்கர்’ திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் - ராஜூ முருகன்’ கூட்டணி கார்த்தி நடிக்கும் ஜப்பானுக்காக மீண்டும் இணைந்துள்ளது. ’சகுனி’ தொடங்கி ’சுல்தான்’ வரை 5 படங்களில் பணியாற்றிய தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருக்கிறார் கார்த்தி.

கார்த்தி ஜோடியாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பை பார்த்துக்கொள்கிறார். அன்பறிவ் சண்டைப் பயிற்சி வழங்குகிறார். ஜப்பான் திரைப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருமென தெரிகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in