`உற்சாகமாக இருக்கிறேன்'-ரஷ்யாவில் `உஸ்னிக்’ ஆனது கார்த்தியின் `கைதி’

`உற்சாகமாக இருக்கிறேன்'-ரஷ்யாவில் `உஸ்னிக்’ ஆனது கார்த்தியின் `கைதி’

கார்த்தி நடித்துள்ள ’கைதி’ படம் ’உஸ்னிக்’ என்ற பெயரில் ரஷ்யாவில் இன்று வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த படம், ’கைதி’. 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் நரேன், அர்ஜுன் தாஸ், பேபி மோனிகா உள்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நாயகி, பாடல்கள் கிடையாது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வரவேற்பைப் பெற்றது. இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘போலா’ என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் ஆகிறது. ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்தப் படம் ரஷ்யாவில் ’உஸ்னிக்’ என்ற பெயரில் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ்த் திரைப்படம் ஒன்று ரஷ்யாவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாவது இதுதான் முதன்முறை என்கிறார்கள். இந்தப் படத்தை ரஷ்யாவில் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.

இதுபற்றி பேசிய நடிகர் கார்த்தி, ``இந்தப் படத்தில் டில்லி என்ற வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளேன். இதற்காக இயக்குநர் லோகேஷ் ராகுலுக்கு நன்றி. இந்தியாவில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் ரஷ்யாவில் வெளியாகிறது. அங்கு வெளியாகும் என் முதல் படம் இது என்பதால் உற்சாகமாக இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in