அக்‌ஷய்குமார் படத்துக்குத் தடை கோரி வழக்கு

அக்‌ஷய்குமார் படத்துக்குத் தடை கோரி வழக்கு
’பிருத்விராஜ்’ படத்தில்..

அக்‌ஷய்குமார் நடித்துள்ள ’பிருத்விராஜ்’ படத்துக்குத் தடை கோரி கர்னி சேனா அமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது.

12-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், வட இந்தியாவில் ஆட்சிசெய்த பிருத்விராஜ் செளகானின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், ’பிருத்விராஜ்’. இதில் அக்‌ஷய்குமார், சஞ்சய் தத், சோனு சூட், மனுஷி சில்லார் உட்பட பலர் நடித்துள்ளார். சந்திரபிரகாஷ் திவேதி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் முடிந்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது.

அக்‌ஷய்குமார்
அக்‌ஷய்குமார்

இந்நிலையில், இந்தப் படத்தின் முன்னோட்டத்தில், பிருத்விராஜ் சக்கரவர்த்தி குறித்து தவறான மற்றும் மோசமான கருத்தை முன் வைப்பதாகவும் இது தங்கள் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி கர்னி சேனா அமைப்பு, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திரைப் படத்துக்கு தணிக்கை வாரியம் சான்றிதழ் அளித்துவிட்டதா என்று கேள்வி எழுப்பியது. பின்னர் இந்த வழக்கை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்த கர்னி சேனா அமைப்பு, ஏற்கெனவே சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவதி’ படத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.