முதல்வர் பார்த்து கண்ணீர் வடித்த திரைப்படத்திற்கு வரிவிலக்கு!

முதல்வர் பார்த்து கண்ணீர் வடித்த திரைப்படத்திற்கு வரிவிலக்கு!

’777 சார்லி’ திரைப்படத்துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கு அறிவித்துள்ளது.

கன்னடத்தில் நடிகர் ரக்சித் ஷெட்டி நடித்துள்ள படம் '777 சார்லி'. இதில் சங்கீதா சிருங்கேரி, பாபி சிம்ஹா, டேனீஷ் சேட் உட்பட பலர் நடித்துள்ளனர். கிரண்ராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் கடந்த 10-ம் தேதி வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மனிதனுக்கும், நாய்க்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியுடன் சொன்ன படம் இது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தப் படத்தை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பார்த்தார். அவருடன் அமைச்சர்கள், ஆர்.அசோக், பி.சி.நாகேஷ் ஆகியோரும் பார்த்தனர். படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த பசவராஜ் பொம்மை, திடீரென்று அழுதார். தனது மறைந்த சன்னி என்ற நாயை இந்தப் படம் நினைவூட்டியதாகக் கூறினார்.

பின்னர் அவர் பேசும்போது, 'இந்தப் படத்தில் தெருநாய் பற்றி சிறப்பான கருத்துகள் இடம் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்து மக்கள், விலங்குகள் மீது அன்பு கொள்பவர்களாக மாற வேண்டும். தெருநாய்களை வளர்க்கவும், அந்த நாய்களைப் பாதுகாக்கவும் அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்துக்கு கர்நாடக அரசு வரிவிலக்கை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில நிதித்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், இன்று (ஜூன் 19) முதல் ஆறு மாதங் களுக்கு இந்தப் படத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அரசின் உத்தரவுபடி, மாநில சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படவில்லை என்பதை ஒவ்வொரு டிக்கெட்டிலும் குறிப்பிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in