நடிகர் அம்பரீஷுக்கு பெங்களூருவில் நினைவு மண்டபம்

நடிகர் அம்பரீஷுக்கு பெங்களூருவில் நினைவு மண்டபம்
நடிகர் அம்பரீஷ் உருவப் படத்துக்கு மலர் தூவும் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

மறைந்த நடிகர் அம்பரீஸுக்கு பெங்களூரில் நினைவு மண்டபம் கட்டப்படுகிறது.

பிரபல கன்னட நடிகர் அம்பரீஸ். நடிகர் ரஜினிகாந்தின் நண்பரான இவர், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு காலமானார். இவர் மனைவி சுமலதா இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். நடிகர் அம்பரீஸுக்கு பெங்களூருவில் உள்ள கன்டீரவா ஸ்டூடியோவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று கா்நாடக அரசு அறிவித்திருந்தது.

அம்பரீஷ்
அம்பரீஷ்

அதன்படி மாநில அரசு சார்பில் அம்பரீஸுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அடிக்கல் நாட்டினார்.

அவர் பேசும்போது, `அம்பரீஸை எப்போதும் பெயர் சொல்லியே அழைப்பேன். எங்கள் இருவருக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நட்பு இருந்தது. நாங்கள் ஒன்றாக அதிக நேரத்தை செலவழித்தோம்' என்று அவருடனான அனுபவங்களை நினைவு கூர்ந்தார். பின்னர், `புனித் ராஜ்குமாருக்கும் விரைவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்' என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in