கர்நாடக தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

கர்நாடக தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி

கர்நாடக தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக, முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கர்நாடகத்தில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

இதுபற்றி அமைச்சர் சுதாகர் கூறும்போது, “கர்நாடகாவில் கடந்த டிசம்பர் மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டன. ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. தியேட்டர்களில் 50 சதவீதம் மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது கரோனா குறைந்து வருவதால், தியேட்டர்களில் 100 சதவீதம் பேர் இருக்கைகளை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in