சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’

சர்வதேச திரைப்பட விழாவில் ‘கர்ணன்’
‘கர்ணன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்த 'கர்ணன்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. வெளிவந்ததும், பல சர்ச்சைகளை இத்திரைப்படம் கிளப்பியது. பல சாதி அமைப்புகளும் இத்திரைப்படத்திற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கின. சமூகத்தில் நிலவும் மற்றும் நிலவிய சாதிய அடக்குமுறைகளை எதிர்த்து உருவான இத்திரைப்படம், தற்போது ஜெர்மனியின் ஃப்ராங்ஃப்ரூட் நகரில் நடக்கும், ‘நியூ ஜெனரேஷன் இண்டிபெண்டன்ட் இந்தியன் பிலிம் பெஸ்டிவல்’ நிகழ்ச்சியில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

‘நியூ ஜெனரேஷன் இண்டிபெண்டன்ட் இந்தியன் பிலிம் பெஸ்டிவல்’
‘நியூ ஜெனரேஷன் இண்டிபெண்டன்ட் இந்தியன் பிலிம் பெஸ்டிவல்’

இந்நிகழ்வு வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. ‘கர்ணன்’ திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுவரும் இந்நிலையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் அடுத்து ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.