சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் உரிமை பெற்ற கரண் ஜோஹர்

சூப்பர் ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் உரிமை பெற்ற கரண் ஜோஹர்
ஹிரிதயம் - பிரணவ், கல்யாணி பிரியதர்ஷன்

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் தமிழ், இந்தி, தெலுங்கு ரீமேக் உரிமையை பிரபல இந்தி இயக்குநர் கரண் ஜோஹர் பெற்றுள்ளார்.

பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன், ஜானி ஆண்டனி உட்பட பலர் நடித்த மலையாள படம், ’ஹிரிதயம்’. வினித் ஸ்ரீனிவாசன் இயக்கிய இந்தப் படத்தை விஷாக் சுப்பிரமணியன் தயாரித்திருந்தார். ஹேஷம் அப்துல் வாஹப் இசை அமைத்திருந்தார். விஸ்வஜித் ஒடுக்கத்தில் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

கரண் ஜோஹர்
கரண் ஜோஹர்

இந்த ரொமான்டிக் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரீமேக் உரிமையை, பிரபல இந்திப் பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன்ஸ் பெற்றுள்ளது.

இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள கரண் ஜோஹர், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸுடன் இணைந்து, அழகான காதல் கதையை கொண்ட ‘ஹிரிதயம்’ படத்தின் இந்தி, தமிழ், தெலுங்கு உரிமையை பெற்றுள்ளோம். அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வரும்’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.