ஆஸ்கருக்குள் நுழைந்த`காந்தாரா’!

ஆஸ்கருக்குள் நுழைந்த`காந்தாரா’!

’காந்தாரா’ படம் ஆஸ்கருக்குள் நுழைந்திருக்கிறது என்பதை தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த ‘காந்தாரா’ திரைப்படம் கன்னடத்தில் வெளியாகி பிறகு பான் இந்தியா அளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்ற படமாக மாறியது. இந்த நிலையில், ‘காந்தாரா’ திரைப்படம் இரண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதியில் நுழைந்திருக்கிறது என்பதை தயாரிப்பு நிறுவனமான ஹாம்பலே தெரிவித்திருக்கிறது. இந்தப் பயணத்தில் உடன் நின்ற அனைவருக்கும் நன்றி. ‘காந்தாரா’ மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பது சந்தோஷம் எனவும் தெரிவித்துள்ளது.

தயாரிப்பு நிறுவனமான ஹாம்பலே ஃபிலிம்ஸ் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு திரைப்படத் தயாரிப்புக்கு மட்டும் கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதைத் தெரிவித்து இருக்கிறது. மேலும், கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகரான யஷ் பிறந்தநாளான நேற்று ‘கே.ஜி.எஃப்3’ படத்தின் அப்டேட் குறித்து தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளதாவது, ‘’கே.ஜி.எஃப்2’ திரைப்படம் பலராலும் விரும்பப்பட்ட அற்புதமான படைப்பு. சீக்கிரம் இன்னொரு மான்ஸ்டரும் காத்திருக்கிறது. இந்த கனவு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்த யஷ்ஷூக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்களுக்கு இந்த ஆண்டு சிறப்பானதொரு ஆண்டாக அமையட்டும். விரைவில் இன்னும் பிரம்மாண்டமாக ‘கே.ஜி.எஃப்.3’ விரைவில் உருவாக இருக்கிறது' என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in