காந்தாரா -2: அதிகாரபூர்வ அறிவிப்பு!

முன்கதையில் விரியும் காந்தாரா 2
காந்தாரா
காந்தாரா

காந்தாரா திரைப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, அதன் அடுத்த பாகம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய காந்தாரா கதைப்படி 2-ம் பாகம் என்றும், அடுத்து வெளியாகும் காந்தாரா -2 முதல் பாகமாக இருக்கும் என்ற விளக்கமும் வெளியாகி உள்ளது.

நேற்றுடன்(பிப்.6) காந்தாரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. ரிஷப் ஷெட்டி எழுதி இயக்கியதோடு, பிரதான கதாப்பாத்திரத்தில் நடித்த இந்த கன்னட திரைப்படம் ரசிக வரவேற்பு மூலமாகவே பான் இந்தியா திரைப்படமாக வளர்ந்தது. கன்னட பதிப்புக்கு கிடைத்த ரசிக வரவேற்பால் தமிழ் தொடங்கி இந்தி வரை அடுத்தடுத்த மொழிகளில் காந்தாரா மொழி மாற்றத்துடன் வெளியானது.

வெளியான மொழிகளில் எல்லாம், அந்த படவுலகின் வெளியீடுகளை வீழ்த்தி வெற்றி பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் வகையில் பல சாதனைகளை படைத்த காந்தாரா திரைப்படத்துக்கு பல்வேறு சர்வதேச விருதுகளும் கிடைத்தன. இதனையடுத்து ’காந்தாரா-2’ படத்துக்கான எதிர்பார்ப்பும் எழுந்தது.

அவற்றை ரிஷப்ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் உறுதிசெய்த போதும், அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போதுதான் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும்போதே ஓடிடி தளங்களிலும் காந்தாரா வெளியாகி, அதிலும் வரவேற்பு பெற்றது. கன்னட திரையரங்குகளில் தற்போது 100வது நாள் விழாவை கொண்டாடும் காந்தாரா திரைப்படம் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதன் மத்தியில் அடுத்த காந்தாராவுக்கான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

இதன்படி காந்தாரா -2 திரைப்படம் அடுத்தாண்டு(2034) வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது. வெளியீட்டு வரிசையில் அது காந்தாரா -2 ஆக இருப்பினும், கதைப்படி காந்தாரா -1 ஆக இருக்கும். அதாவது, தற்போது 100வது நாள் கண்டுள்ள காந்தாரா திரைப்படத்தின் முன்கதை, காந்தாரா -2 திரைப்படமாக உருவெடுக்க உள்ளது. காந்தாரா திரைப்படத்துக்கான படப்பிடிப்பின் இடையே இந்த முன்கதையை உருவாக்கி முடித்ததாகவும், இதர பணிகள் நிறைவடைந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி படத் தயாரிப்பு நிறுவனம் சார்பாக, அதிகாரபூர்வ அறிவிப்பும் நேற்றிரவு வெளியானது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in