அதிர்ச்சி... பிரபல தயாரிப்பாளர் கைது! இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டல்!

வீரேந்திரபாபு
வீரேந்திரபாபு

இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறிக்க முயன்ற கன்னட திரைப்பட தயாரிப்பாளரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த கன்னட திரைப்பட தயாரிப்பாளர் வீரேந்திரபாபு மீது கொடிகெஹள்ளி போலீஸில் இளம்பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதில், தயாரிப்பாளர் வீரேந்திரபாபு தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக் கொண்டு 15 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக புகாரில் கூறியுள்ளார்.

அந்த தொகையைத் தராவிட்டால் வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டினார். அதனால் அவருக்குப் பணத்தை கொடுக்க தனது தங்க நகைகளை விற்க வேண்டும் என்று கூறிய தன்னை, ஜூலை 30 அன்று, வீரேந்திரபாபு மீண்டும் தொலைபேசியில் அழைத்து மிரட்டினார் என்று புகாரில் கூறியுள்ளார். மேலும் தன்னை காரில் அழைத்துச் சென்று துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் புகாரில் கூறியுள்ளார்.

இதையடுத்து தயாரிப்பாளர் வீரேந்திரபாபு மீது கற்பழிப்பு மற்றும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டதுடன் அவரை கொடிகேஹள்ளி போலீஸார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வீரேந்திரபாபுவின் நண்பர்கள் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in