`அரபி': அண்ணாமலை நடித்துள்ள கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியானது

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள 'அரபி' எனும் கன்னட திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருக்கும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தற்போது அரசியலில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில் அவர் நடித்துள்ள 'அரபி' எனும் கன்னட திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

இரு கைகளையும் இழந்த நீச்சல் வீரர் விஸ்வாஸின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், அவரின் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள 'அரபி' படத்தின் டீசரில் நீச்சல் வீரர் விஸ்வாஸ் மற்றும் அண்ணாமலை நடித்துள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளது. முற்றிலும் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஆர்.ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in