பல் சிகிச்சைக்குச் சென்ற நடிகையின் முகம் பலூன் போல் வீங்கியதால் அதிர்ச்சி!


பல் சிகிச்சைக்குச் சென்ற நடிகையின் முகம் பலூன் போல் வீங்கியதால் அதிர்ச்சி!

பல் சிகிச்சைக்குச் சென்ற நடிகையின் முகம் திடீரென கோரமாக மாறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்தவர் சுவாதி சதீஷ். இவர் கன்னடத்தில் 'எஃப் ஐ ஆர்', '6 டு 6' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 20 நாளுக்கு முன் பல் வலி ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஹென்னூரில் உள்ள தனியார் பல் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு ரூட் கெனால் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிகிச்சை முடிந்ததுமே அவர் முகம் திடீரென வீங்கியது. இன்னும் இரண்டு நாளில் வீக்கம் குறையும் என்று மருத்துவர் கூறியுள்ளார். ஆனால், 20 நாள் ஆகியும் வீக்கம் குறையவில்லை. முக அமைப்பே மாறிவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதி, சிகிச்சை அளித்த டாக்டரிடம் கேட்ட போது விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் சரியாகவில்லை. மருத்துவமனையில் தொடர்பு கொண்டு கேட்டாலும் யாரும் சரியாக பதில் சொல்லவில்லை என்று கூறியுள்ள சுவாதி, தவறான சிகிச்சை மூலம் தனது முகத்தை சிதைத்துவிட்டதாகக் கண்ணீர் விட்டார்.

சிகிச்சைக்கு முன்பு மயக்க மருந்துக்கு பதிலாக வேறு மருந்தை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து நடிகை சுவாதி, வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

கன்னட நடிகை சேத்னா ராஜ் உடை எடை குறைப்பு சிகிச்சையின் போது கடந்த மாதம் திடீரென மரணமடைந்தார். இந்நிலையில் பல் சிகிச்சைக்குச் சென்று தவறான சிகிச்சையில் நடிகையின் முகம் மாற்றம் அடைந்த சம்பவம், கன்னட சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in