‘சூப்பர் ஸ்டாரின் அதி தீவிரமான ரசிகன் நான்’: ரஜினி படத்தில் இணையும் சிவராஜ்குமார் ஓபன் டாக்!

‘சூப்பர் ஸ்டாரின் அதி தீவிரமான ரசிகன் நான்’: ரஜினி படத்தில் இணையும் சிவராஜ்குமார் ஓபன் டாக்!

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தில் நடிப்பதை கன்னட நடிகர் சிவராஜ்குமார் உறுதி செய்துள்ளார்.

'அண்ணாத்த' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தை இயக்குநர் நெல்சனுடன் உறுதி செய்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் பணிகள் தொடங்கியுள்ளது. நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதாக முன்பு சொல்லப்பட்டது. இப்போது அந்த தகவலை அவரே தன்னுடைய பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இதுபற்றி அவர் சிவராஜ்குமார் கூறுகையில், "நடிகர் ரஜினிகாந்துடன் திரையில் இணைந்து நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய சிறு வயதில் இருந்தே சூப்பர் ஸ்டாரின் அதி தீவிரமான ரசிகன் நான். அவருடன் எப்போதுமே எனக்கு தனிப்பட்ட முறையில் பாசப் பிணைப்பு உண்டு. நாங்கள் இருவரும் இணைந்து நடிப்பது நிச்சயம் எங்கள் ரசிகர்களுக்கு குதூகலமான ஒன்றாக தான் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. சிவராஜ்குமாரின் படப்பிடிப்பு ரஜினிகாந்துடன் செப்டம்பர் மாதத்தில் பெங்களூரு மற்றும் மைசூர் பகுதிகளில் நடக்கிறது. நடிகை ஐஸ்வர்யா ராய் ரஜினிகாந்தின் மனைவியாக இந்த படத்தில் நடிப்பதை தனது பேட்டியில் உறுதிப்படுத்தியிருக்கிறார். 'எந்திரன்' படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து இந்த ஜோடி மீண்டும் திரையில் இணைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர நடிகைகள் ரம்யாகிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது படத்தில் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in