பிரபல நடிகர் குத்திக்கொலை!

பிரபல நடிகர்  குத்திக்கொலை!

பிரபல நடிகர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவர் மைத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் மத்தூரைச் சேர்ந்தவர் சதீஷ் வஜ்ரா (36). இவர் ’லகோரி’ என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார். பல படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். பெங்களூரு பட்டனகெரே பகுதியில் வசித்து வந்த இவர், சலூன் ஒன்றையும் நடத்தி வந்தார். பல நடிகர்கள் அவருக்கு வாடிக்கையாளர்கள்.

கடந்த நான்கு வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. ஏழு மாதங்களுக்கு முன் மனைவி தற்கொலை செய்துகொண்டார்.

சதீஷ் செய்த கொடுமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக மனைவி குடும்பத்தினர் கருதினர். இந்நிலையில் சதீஷ் மனைவியின் சகோதரர் சுதர்சன் மற்றும் அவர் நண்பர் நாகேந்திரன் ஆகியோர் நேற்று அவர் வீட்டுக்கு சென்றனர். அங்கு, சதீஷுக்கும், அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து மறைத்து வைத்திருந்த கத்தியால், சதீஷின் கழுத்து மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு அவர்கள் தப்பியோடிவிட்டனர். பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சதீஷை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீஸார், சுதர்சன் மற்றும் நாகேந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in