’குப்பைகளை விற்காதீர்கள்’: தீபிகா படத்தைச் சாடிய கங்கனா

’குப்பைகளை விற்காதீர்கள்’: தீபிகா படத்தைச் சாடிய கங்கனா
கங்கனா ரனாவத், தீபிகா படுகோன்

நடிகை தீபிகா படுகோன் நடித்துள்ள படத்தை குப்பை என்று நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அடிக்கடி தடலாட்சி கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையில் சிக்கும் நடிகை கங்கனா ரனாவத், ’லாக்கப்’ என்ற புதிய ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்துகிறார். ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், தீபிகா படுகோனின் ’கெஹ்ரையான்’ (Gehraiyaan) படம் பற்றி கேட்கப்பட்டது. அதில் இடம்பெறும் முத்தக்காட்சி போஸ்டர் சர்ச்சையானது பற்றி கேட்டபோது மற்றவர்களின் படத்தை நான் விளம்பரப்படுத்த மாட்டேன் என்றார் கங்கனா.

இந்நிலையில் ’கெஹ்ரையான்’ படம், வெள்ளிக்கிழமை ஓடிடி-யில் வெளியானது. இதற்கிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1965 ஆம் ஆண்டு மனோஜ்குமார் நடிப்பில் வெளியான ’ஹிமாலே கி காட் மேன்’படத்தின் சூப்பர் ஹிட் பாடல் வீடியோவை வெளியிட்டுள்ள கங்கனா, அதில், தயவு செய்து மில்லினியம், நியூ ஏஜ் அல்லது நவீனத் திரைப்படம் என்ற பெயரில் குப்பைகளை விற்க வேண்டாம். தரமற்றத் திரைப்படங்கள்

எப்போதும் தரமற்றவைதான். ஆபாசத்தை காட்டினாலும் அந்தப் படத்தைக் காப்பாற்ற முடியாது. இது மிகவும் அடிப்படை உண்மை’ என்று கூறியுள்ளார்.

கங்கனாவின் இந்த விமர்சனம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகை கங்கனா, இதற்கு முன் தீபிகாவை ’மனச்சோர்வு வியாபாரம்’ செய்வதாக பலமுறை சாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in