'நம்பவே முடியலையே':அச்சு அசலாக இந்திரா காந்தியாக மாறிய பிரபல நடிகை!

'நம்பவே முடியலையே':அச்சு அசலாக இந்திரா காந்தியாக மாறிய பிரபல நடிகை!

’எமர்ஜென்சி’ படப்பிடிப்பு தொடங்கியதை முன்னிட்டு இந்திரா காந்தியாக நடிக்கும் பிரபல நடிகையின் பர்ஸ்ட் லுக் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் தமிழில், 'தாம் தூம்', 'தலைவி' படங்களில் நடித்துள்ளார். ’தலைவி’யில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக நடித்திருந்தார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்பும் இவர் நடித்து.’தாக்கத்’ என்ற படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. ரூ.85 கோடியில் உருவான இந்தப் படம் வெறும் ரூ.4 கோடியை மட்டுமே வசூலித்து மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், நடிகை கங்கனா தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தானே இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு ’எமர்ஜென்சி’ என்று தலைப்பு வைத்துள்ளார்.

இது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை கதை இல்லை என்றாலும் நடிகை கங்கனா இதில் இந்திரா காந்தியாக நடிக்கிறார். அவருடைய பர்ஸ்ட் லுக் இடம்பெறும் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், இந்திரா காந்தியை போலவே நடிகை கங்கனா இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். குரலும் இந்திரா காந்தியை நினைவுப்படுத்துவதாக இருக்கிறது. அந்த வீடியோவில், கங்கனாவுக்கு அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹென்றி கிஸ்ஸிங்கரிடம் இருந்து அழைப்பு வருகிறது. கங்கனாவின் செயலாளரிடம், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸன், ’சர்’ என்பதற்கு பதிலாக அவரை ’மேடம்’ என்று அழைக்கலாமா? எனக் கேட்கிறார். இதை கங்கனாவிடம் தெரிவிக்கிறார் செயலாளர். அவர், ஆம் என்கிறார். பிறகு செயலாளரைப் பார்த்து, அலுவலகத்தில் அனைவரும் அவரை ’சார்’ என்றுதான் அழைக்கிறார்கள் என சொல்லுமாறு கூறுகிறார்.

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள கங்கனா,' உலக சரித்திரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய பெண்களில் ஒருவரை இந்தப் படம் சித்தரிக்கிறது’ என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in