'தினமும் கனவு நனவாகும்’: ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

'தினமும் கனவு நனவாகும்’: ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பிரபல நடிகை

’எமர்ஜென்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு, படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார், பிரபல நடிகை.

இந்தி நடிகை கங்கனா ரனாவத் தமிழில், 'தாம் தூம்', 'தலைவி' படங்களில் நடித்துள்ளார். ’தலைவி’ படத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவாக அவர் நடித்திருந்தார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்பும் இவர் நடித்த ’தாக்கத்’ என்ற படம் சமீபத்தில் வெளியானது. ரூ.85 கோடியில் உருவான இந்தப் படம் வெறும் ரூ.4 கோடியை மட்டுமே வசூலித்து மோசமான தோல்வியைச் சந்தித்தது.

இந்நிலையில், நடிகை கங்கனா தனது அடுத்தப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். தானே இயக்கி நடிக்கும் இந்தப் படத்துக்கு ’எமர்ஜென்சி’ என்று தலைப்பு வைத்துள்ளார். இது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை கதை இல்லை என்றாலும் நடிகை கங்கனா, இதில் இந்திரா காந்தியாக நடிக்கிறார். அவருடைய ஃபர்ஸ்ட் லுக் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

அதில், ‘உலக சரித்திரத்தில் சக்தி வாய்ந்த மற்றும் சர்ச்சைக்குரிய பெண்களில் ஒருவரை இந்தப் படம் சித்தரிக்கிறது’ என்று தெரிவித்திருந்தார். அதில், இந்திரா காந்தியைப் போலவே நடிகை கங்கனா இருப்பதாக ரசிகர்கள் கூறினர். இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் கங்கனா.

அதில், ’எமர்ஜென்சி ஃபர்ஸ்ட் லுக் வரவேற்பைப் பெற்றது. ஒவ்வொரு நாளும் நம் கனவு நனவாகும். உலகின் மிகச் சிறந்த குழு என்னிடம் இருக்கிறது’ என்று படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார் கங்கனா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in