`ஏன் இப்படிச் செய்கிறான் என்று அப்போது புரியவில்லை'- சிறுவயது பாலியல் தொல்லை குறித்து கங்கனா

`ஏன் இப்படிச் செய்கிறான் என்று அப்போது புரியவில்லை'- சிறுவயது பாலியல் தொல்லை குறித்து கங்கனா

நடிகை கங்கனா ரனாவத், சிறுவயதில் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகள் குறித்து தெரிவித்துள்ளார்.

நடிகை கங்கனா, லாக் அப் என்ற நிகழ்ச்சியை ஓடிடி தளத்துக்காக நடத்தி வருகிறார். இதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்வார்கள். ஸ்டான்ட் அப் காமெடியன் முனவர் பரூக்கி தனக்கு சிறுவயதில் நடந்த பாலியல் தொல்லைப் பற்றி கூறினார். தனக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தவர்கள் அனைவருமே உறவினர்கள் என்றும் அதை வெளியில் சொல்ல முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிறுவயதில் தனக்கு நடந்த பாலியல் தொல்லை பற்றி நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ``நான் சிறியவளாக இருந்தபோது, என் ஊரைச் சேர்ந்த, சிறுவன் ஒருவன், தகாத முறையில் தொடுவது வழக்கம். ஆனால் அதன் அர்த்தம் என்னவென்று தெரியாது. குழந்தைகளுக்கு, நல்ல தொடுதலும் கெட்டத் தொடுதலுக்குமான வித்தியாசத்தை சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. சமூகம் எதிர்கொள்ளும் பெரிய நெருக்கடி இது. இதனால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். குடும்பம் பாதுகாப்பானதாக இருந்தாலும், குழந்தைகள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டுதான் இருக்கின்றனர்.

நான் இன்னொரு பிரச்சினையையும் சிறுவயதில் எதிர்கொண்டேன். என்னைவிட மூன்று, நான்கு வயது மூத்த பையன், எங்களை அழைப்பான். ஆடைகளைக் களைந்து நிற்கச் சொல்லி சோதிப்பதாகச் சொல்வான். ஏன் இப்படிச் செய்கிறான் என்று அப்போது புரியாது. இதற்குப் பின்னால் பெரிய களங்கம் இருக்கிறது, குறிப்பாக ஆண்களுக்கு'' என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.