`சந்திரமுகி2’ க்ளைமாக்ஸ் காட்சியில் கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்`சந்திரமுகி2’ க்ளைமாக்ஸ் காட்சியில் கங்கனா ரனாவத்!

‘சந்திரமுகி2’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கங்கனா ரனாவத் இணைந்துள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் வெளியாகி வெற்றிப்பெற்ற ‘சந்திரமுகி’ படத்தின் அடுத்த பாகம் தயாராகி வருகிறது. ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சமயத்தில் இதன் க்ளைமாக்ஸ் காட்சிக்காக கங்கனா இணைந்துள்ளார்.

ஒப்பனை அறையில் தயாராகிக் கொண்டிருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அவர், ‘மீண்டும் ‘சந்திரமுகி2’ படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்பியுள்ளேன். இப்போது நான் தயாராகிக் கொண்டிருக்கும் காட்சியும் சூழலும் பலரும் எதிர்பார்த்திருக்கக்கூடிய ஒன்று’ என அதில் பதிவிட்டுள்ளார். முதல் பாகத்தில் ஜோதிகாவின் ‘ரா ரா’ பாடலைப் போலவே இரண்டாம் பாகத்தில் அப்படியானதொரு பாடல் இருக்கிறது எனவும் அதற்காகவே கங்கனா தயாராகிக் கொண்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in