இந்திரா காந்தி ஆகிறார் கங்கனா ரனாவத்!

இந்திரா காந்தி ஆகிறார் கங்கனா ரனாவத்!

நடிகை கங்கனா ரனாவத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க இருக்கிறார்.

நடிகை கங்கனா ரனாவத், தமிழில், தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்பும் இவர், ’தாக்கத்’ என்ற இந்திப் படத்தில் நடித்திருந்தார். அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா, சாஸ்வதா சட்டர்ஜி உட்பட பலர் நடித்த இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியானது.

ரஜ்னீஷ் கய் இயக்கிய இந்தப் படம், முதல் நாளில் இருந்தே வசூலில் ஏமாற்றத்தைத் தந்தது. மோசமான தோல்வியை எந்தப் படமும் இப்படி சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது. ரசிகர்கள் கங்கனாவை சமூக வலைதளங்களில் கடுமையாக கிண்டலடித்து வந்தனர். முதல் வாரத்தில் ரூ.10 கோடி வசூலை கூட ’தாக்கத்’ எட்டவில்லை. படம் ரிலீஸான எட்டாவது நாளில் வெறும் 20 பேர் மட்டுமே இந்தப் படத்தைப் பார்த்துள்ளனர்.

இந்நிலையில், நடிகை கங்கனா 'எமர்ஜென்சி' என்ற படத்தில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கங்கனாவே தயாரித்து இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது இந்திரா காந்தியின் ’பயோபிக்’ படமாக இல்லாமல் எமர்ஜென்சி காலகட்டத்தில் நடந்த அரசியல் விஷயங்களை மையமாக வைத்து உருவாக்கப் போவதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே அவர் ’மணிகர்ணிகா’ படத்தை இயக்கி நடித்திருந்தார்.

பாஜக ஆதரவாளரான கங்கனா, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இந்தப் படத்தை இயக்கி நடிக்கப் போவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in