`அற்புதமான மனிதர்களுக்கு விடைக்கொடுக்கிறேன்'- `சந்திரமுகி2’ படப்பிடிப்பை முடித்த கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி!

‘சந்திரமுகி2’
‘சந்திரமுகி2’`அற்புதமான மனிதர்களுக்கு விடைக்கொடுக்கிறேன்'- `சந்திரமுகி2’ படப்பிடிப்பை முடித்த கங்கனா ரனாவத் நெகிழ்ச்சி!

நடிகை கங்கனா ரனாவத் ‘சந்திரமுகி2’ படத்தில் தனக்கான போர்ஷனை முடித்துள்ளார்.

பி.வாசு இயக்கத்தில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா உள்ளிட்டப் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி2’. சமீபத்தில், இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு தெரிவித்ததை அடுத்து, இதன் கதாநாயகி கங்கனா ரனாவத் தனக்கான படப்பிடிப்பு முடிந்துள்ளதைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், ‘இன்று ‘சந்திரமுகி2’ படத்தில் என்னுடைய போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிவடைகிறது. இங்கு நான் சந்தித்த பல அற்புதமான மனிதர்களுக்கு விடைக்கொடுக்கிறேன் என்பது கடினமாகத்தான் உள்ளது.

இத்தனை நாட்களில் இதுவரை நான் ராகவா லாரன்ஸ் மாஸ்டருன் புகைப்படமே எடுக்கவில்லை. ஏனெனில், பெரும்பாலும் நாங்கள் படத்தின் காஸ்ட்யூமிலேதான் இருப்போம். அதனால், இன்று படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டேன். பின்னணி நடனக் கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் இன்று வெற்றிகரமான இயக்குநராக, நடனக்கலைஞராக, நடிகராக, நல்ல மனிதராக வலம் வருகிறார். அவருடன் பணிபுரிந்தது எனக்குப் பெருமை. உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி’ என கூறியுள்ளார் கங்கனா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in