’பாலிவுட் சிதைக்க அனுமதிக்கக் கூடாது’

தென்னிந்திய சினிமாவுக்கு கங்கனா அட்வைஸ்
கங்கனா
கங்கனா

தென்னிந்திய திரைப்படங்களை பாலிவுட் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

ராஜமெளலியின் ’பாகுபாலி’-க்கு பிறகு மெகா பட்ஜெட் தென்னிந்திய படங்கள், பான் இந்தியா முறையில் தயாராகின்றன. இந்தப் படங்கள் பாலிவுட்டிலும் வரவேற்பைப் பெறுகின்றன. யாஷ் நடித்த ’கே.ஜி.எப்’படத்துக்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடித்துள்ள ’புஷ்பா’படமும் இந்தி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வசூல் இந்தி திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை கங்கனா ட்வீட்
நடிகை கங்கனா ட்வீட்

இந்நிலையில், தென்னிந்திய திரைப்படங்களையும் கலைஞர்களையும் பாராட்டியுள்ள நடிகை கங்கனா, தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் ஏன் மிகவும் பிரபலமடைகின்றன என்பது பற்றி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1. தென்னிந்திய சினிமாதுறையினர் இந்திய கலாச்சாரத்துடன் ஆழமாக வேரூன்றியுள்ளனர். 2. அவர்கள் குடும்பங்களையும் உறவுகளையும் நேசிக்கிறார்கள். மேற்கத்திய கலாச்சாரத்தால் ஈர்க்கப்படவில்லை. 3. அவர்களின் தொழில்முறை மற்றும் ஆர்வம் ஈடு இணையற்றது’ என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, பாலிவுட் அவர்களைச் சிதைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் கங்கனா ஆலோசனை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in