‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றி வாய் திறக்காத பாலிவுட்: கங்கனா விமர்சனம்

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பற்றி வாய் திறக்காத பாலிவுட்: கங்கனா விமர்சனம்

’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படம் பற்றி இந்தித் திரையுலகில் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.

விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தித் திரைப்படம், ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இதில், அனுபம் கெர், மிதுன் சக்கரவர்த்தி, பல்லவி ஜோஷ், தர்ஷன் குமார் உள்பட பலர் நடித்துள்ளனர்.

காஷ்மீரில் 1990-களில் இந்து பண்டிட்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், பயங்கரவாதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து பண்டிட்கள் அங்கிருந்து உயிர்பயத்துடன் தப்பிய சம்பவங்கள் ஆகியவற்றை வைத்து இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படம் பற்றி இந்தித் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கருத்து தெரிவிக்காமல் அமைதிகாப்பதாக நடிகை கங்கனா விமர்சித்துள்ளார்.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
தி காஷ்மீர் ஃபைல்ஸ்

“திரையுலகில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’படம் பற்றி நிலவும் அமைதியை கவனியுங்கள். இதன் கதை மட்டுமல்ல, வியாபாரமும் முன்மாதிரியாக இருக்கிறது. இந்த வருடத்தில் மிகவும் வெற்றிகரமான, லாபகரமான படமாக இது இருக்கும். பல முன்முடிவுகளை உடைத்து இந்தப் படம் ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு மீண்டும் கொண்டு வந்திருக்கிறது. காலை 6 மணி காட்சிகள்கூட நிரம்பி வழிகின்றன. இது நம்ப முடியாதது” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்தப் படத்தின் வசூல் தொடர்பாக, திரைப்பட வர்த்தக ஆய்வாளர் தரன் ஆதர்ஷ் வெளியிட்டுள்ள விவரங்களை டேக் செய்திருக்கும் நடிகை கங்கனா, “மலிவான விளம்பரம் இல்லை. போலி எண்ணிக்கை இல்லை. தேச விரோதத் திட்டம் ஏதுமில்லை. நாடு மாறும்போது திரைப்படங்களும் மாறும், ஜெய்ஹிந்த்” என்று கூறியுள்ளார்.

சமீபத்தில், சஞ்சய் லீலா பன்ஸாலி இயக்கத்தில், ஆலியா பட் நடிப்பில் வெளியான, ’கங்குபாய் காடியாவாடி’ படத்தின் வசூல் விவரங்கள் போலியானவை என்றும் கங்கனா குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.