கங்கனா வாங்கிய சொகுசு கார்: விலை என்ன தெரியுமா?

கங்கனா வாங்கிய சொகுசு கார்: விலை என்ன தெரியுமா?

நடிகை கங்கனா ரனாவத் புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத், தமிழில் தாம் தூம், தலைவி படங்களில் நடித்துள்ளார். அடிக்கடி சர்ச்சைக் கருத்துகளைக் கூறி பரபரப்பைக் கிளப்பும் இவர், லாக்கப் என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வந்தார். அதில் தனது கடந்தகால வாழ்க்கைப் பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார்.

இப்போது அவர், அர்ஜுன் ராம்பால், திவ்யா தத்தா ஆகியோருடன் நடித்துள்ள ’தாக்கத்’ படம் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் பிரீமியரில் நேற்று கலந்துகொண்ட நடிகை கங்கனா, தான் வாங்கிய புதிய சொகுசு காரை அறிமுகப்படுத்தினார். மெர்சிடிஸ் மேபட்ச் எஸ் 680 (Mercedes Maybach S680) வகை காரான இதன் விலை, 3.6 கோடி ரூபாய்.

இந்த காருடன் நடிகை கங்கனா, அவர் சகோதரி ரங்கோலி சந்தல், அவர் மகன் பிருத்விராஜ், சகோதரர் அக்‌ஷித் உட்பட குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துகொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், காரின் மேல் வைக்கப்பட்ட ரிப்பனை, நீக்கிக் கொள்ளலாமா? என்று கேட்கும் கங்கனா, இப்போதுதான் திருமணம் ஆனது போல் உணர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in