அவதூறு வழக்கில் மூன்றாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான கங்கனா!

அவதூறு வழக்கில் மூன்றாவது முறையாக நீதிமன்றத்தில் ஆஜரான கங்கனா!

பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தொடர்ந்த அவதூறு வழங்கில் நடிகை கங்கனா ரனாவத் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தை அடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் மற்றும் போதைப் பொருள் பயன்பாடு குறித்து கடும் விவாதம் எழுந்தது. நடிகை கங்கனா, பாலிவுட் இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் மீது அப்போது பரபரப்பு புகார்களைக் கூறினார். பின்னர் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர், பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் பற்றி சில தகவல்களைத் தெரிவித்திருந்தார்.

ஜாவேத் அக்தர், கங்கனா
ஜாவேத் அக்தர், கங்கனா

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு ஜாவேத் அக்தர், கங்கனாவுக்கு எதிராக மும்பை அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதில், நடிகை கங்கனா தனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவதூறாகப் பேசியதாகக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு அந்தேரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் நடிகை கங்கனா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து அவர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜரானார். அவர் இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 3 முறை அவர் ஆஜராகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in