‘கோபக்கார இளைஞன்’: யாஷை யாருடன் ஒப்பிடுகிறார் கங்கனா?

‘கோபக்கார இளைஞன்’: யாஷை யாருடன் ஒப்பிடுகிறார் கங்கனா?

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள ‘கே.ஜி.எஃப்: சாப்டர் 2’ படம் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகர் யாஷ், ராக்கி பாய் என்ற கேரக்டரில் மிரட்டலாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ஈஸ்வரி ராவ் உள்பட பலர் நடித்துள்ளனர். புவன் கௌடா ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி பஸுரூர் இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளில் இந்தப் படம் கடந்த 14-ம் தேதி வெளியானது. வெளிநாடுகள் உட்பட திரையிடப்பட்ட அனைத்து பகுதிகளிலும் படத்துக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத், நடிகர் யாஷை, பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சனோடு ஒப்பிட்டு கருத்துத் தெரிவித்துள்ளார்.

‘கடந்த சில தசாப்தங்களாகக் காணாமல் போயிருந்த கோபக்கார இளைஞனைக் கண்முன் நிறுத்துகிறார். 70-களில் இருந்து அமிதாப் பச்சன் விட்டுச் சென்ற அந்த வெற்றிடத்தை நடிகர் யாஷ் நிரப்புகிறார். அற்புதம்’ என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில், யாஷ், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அல்லு அர்ஜுன் ஆகியோரின் புகைப்படங்களைப் பதிவிட்டு, ‘தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் தங்கள் கலாசாரத்தில் வேரூன்றி இருக்கிறார்கள். திறமை, கடின உழைப்பு தவிர அவர்கள் கேரக்டர்களின் நம்பகத் தன்மை பார்வையாளர்களை ஈர்க்கிறது’ என்று கங்கனா தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in