கமலின் `விக்ரம்' படப்பிடிப்பு நிறைவு: `கேக்' வெட்டி கொண்டாட்டம்

கமலின் `விக்ரம்' படப்பிடிப்பு நிறைவு: `கேக்' வெட்டி கொண்டாட்டம்

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் `விக்ரம்' பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

நடிகர் விஜய் நடித்துள்ள `மாஸ்டர்' படத்தை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் நேற்றுடன் முடிவடைந்தது. சில தினங்களுக்கு முன்பு கமல் படத்தில் தனது காட்சியை முடித்துவிட்டார். இந்நிலையில், விக்ரம் படத்தில் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது. இதையடுத்து படக்குழுவினர் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

இதையடுத்து லோகேஷ் கனகராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். வீடியோவில் பஹத் பாசில் கையில் துப்பாக்கியுடன் சுட, மற்ற படக்குழுவினர் ஆரவாரத்துடன் படப்பிடிப்பு நிறைவைத் தெரிவித்துள்ளனர். மொத்தம் 110 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளதாகவும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.