`பத்தல பத்தல’..!- வெளியானது கமல்ஹாசனின் `விக்ரம்’ பட சிங்கிள்

`பத்தல பத்தல’..!- வெளியானது கமல்ஹாசனின் `விக்ரம்’ பட சிங்கிள்

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மே 15-ம் தேதி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. தற்போது, அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து முதல் சிங்கிளாக கமல்ஹாசன் எழுதி பாடியுள்ள `பத்தல பத்தல' என்ற பாடல் வெளியாகியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமலின் குத்தாட்டங்களைக் கொண்டு உருவாகியிருக்கும் இந்த பாடல் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் சிறப்பான விருந்து வைத்துள்ளது.

“கஜானாலே காசில்லே.. கல்லாலையும் காசில்லே! ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பாலே!” போன்ற வரிகள் மத்திய அரசை டார்கெட் செய்து எழுதியதைப்போல் உள்ளதாக இணையத்தில் பேசிவருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in