'ஜெய் பீம்' திரைப்படம் பார்த்து கண்கள் குளமானது : கமல் உருக்கம்

'ஜெய் பீம்' திரைப்படம் பார்த்து கண்கள் குளமானது : கமல் உருக்கம்

தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா தயாரித்து, நடித்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் இன்று வெளியானது. பழங்குடிகளான இருளர்கள் மீது நடத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தை எதிர்த்து இத்திரைப்படம் அமைந்துள்ளது. பல தரப்பிலும் இத்திரைப்படம் சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது.

இந்நிலையில்,'ஜெய் பீம்' திரைப்படம் பார்த்து என் கண்கள் குளமாகின என்று கமல்ஹாசன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘குரலற்றவர்களின் குமுறல்களை பொதுச்சமூகத்தின் மனசாட்சிக்குக் கொண்டு சேர்த்த சூர்யாவிற்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார் கமல்ஹாசன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in