மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!

மீண்டும் தொடங்கும் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு!

ஷங்கர் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட படம், ’இந்தியன் 2’. கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சித்தார்த் உள்பட பலர் இதில் நடிக்கிறார்கள். அனிருத் இசை அமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த 2019-ல் தொடங்கியது.

பின்னர் கிரேன் விபத்து காரணமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து கரோனா பரவியதால் படப்பிடிப்பு தடைபட்டது. இதற்கிடையே இயக்குநர் ஷங்கருக்கும் லைகா நிறுவனத்துக்கும் பட்ஜெட் தொடர்பாகப் பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பாக வழக்கும் தொடரப்பட்டது.

இந்தச் சூழலில், ஷங்கர் தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கச் சென்றார். இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ படம் சூப்பர் ஹிட்டாகி இருப்பதால், ‘இந்தியன் 2’ படத்தின் பிரச்சினைகள் முடிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்த நிலையில், இந்தப் படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தத் தகவலை அவர் மறுத்தார். செப்டம்பர் 13-ம் தேதி முதல் ’இந்தியன் 2’ படப்பிடிப்பில் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.

இதனால், அன்றுதான் அந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்குவதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், வரும் 24-ம் தேதி முதல் சென்னையில், இதன் பிடிப்பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் இல்லாத காட்சிகளைப் படமாக்குகின்றனர். கமல் பங்கேற்கும் காட்சிகள், செப்டம்பர் 13-ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக ஷங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in